சென்ற பதிவில் நாம் கேட்ட இசைத்துளிகள் இடம் பெற்ற பாடல் ராசாவே உன்னை விட மாட்டேன். படம்: அரண்மனைக் கிளி.
ஜானகியின் அசத்தலான ஆரம்பத்துடன் புல்லாங்குழல் கை கோர்த்துக் கொண்டு ஒரு இனிமையான துவகதைத் தர, அங்கிருந்து ஏற்ற இறக்கங்கள் அற்ற வண்டிப் பாதையில் மாட்டு வண்டிப் பயணம் போல சீராகச் செல்கின்றது பாடல். பாடல் முழுவதும் வயல் வெளிகள், நீரோடைகள், பூந்தோட்டங்கள், பட்டாம்பூச்சி, ஆட்டுக்குட்டிகள் என்று கிராமிய மனம் கமழும். கதாநாயகியின் முக பாவங்களை மட்டும் சற்று சகித்துக் கொள்ள வேண்டும். ஒரு எளிமையான அமைதியான பாடலில் கூட, பாடலுக்கு இடையே வரும் இடைவெளிகளில் புல்லாங்குழலையும் வயலினையும் குழைத்து நரம்புகளில் சிலிர்ப்புகளை ஏற்படுத்துகிறார் ராஜா. வரப்பின் மீது நடந்து கொண்டே கைகளால் நெற்கதிர்களின் தலை கோதிக்கொண்டு செல்வது போல காட்சிகளை வருடிச் செல்கிறது அந்த இடைவெளி இசைத்துளிகள்.
ஊரு பக்கம் போயி ரொம்ப நாள் ஆச்சுன்னு நினைக்கறவங்க எல்லாம் இந்த பாட்ட பாத்தா ஒரு சின்ன முன்னோட்டம் மாதிரி இருக்கும்.
யூடியூப் பதிவிற்காக நன்றிகள் பாலாஜி.